கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 217 பேர் தொற்றாளர்களாக அடையாளம்


இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 543 பேரில் 217 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 85 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 40 பேர், காலி மாவட்டத்தில் 26 பேர் , கண்டி மாவட்டத்தில் 13 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 10 பேர் , மட்டக்களப்பு மாவட்டத்தில் 09 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 08 பேர், களுத்துறை மாவட்டத்தில் 08 பேர், மாத்தறை மாவட்டத்தில் 06 பேர் , குருணாகல் மாவட்டத்தில் 06 பேர் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

பொலன்னறுவை மாவட்டத்தில் 05 பேர் , நுவரெலியா மாவட்டத்தில் 04 பேர் , அம்பாறை மாவட்டத்தில் 03பேர் , கேகாலை மாவட்டத்தில் 02 பேர் , முல்லைத்தீவு மாவட்டத் தில் ஒருவர் மற்றும் அனுராதபுர மாவட்டத்தில் ஒருவர் ஆகியோர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளனர் .

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 07 பேரும் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் அடங்குவதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

No comments: