தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 15 பேர் கைது


தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 30ம் திகதியிலிருந்து இதுவரை முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரை 2725 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அத்துடன் 2600 நபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


No comments: