கிழக்கில் 1432 , கல்முனை பிராந்தியத்தில் 897 நபர்கள் அடையாளம்


கிழக்கு மாகாணத்தில் கடந்த 12 மணித்தியாலத்திற்குள் 41 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் குறிப்பிட்டார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட என்டிஜன்ட் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் படி மொத்தமாக 1432 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் திருகோணமலை மாவட்டத்தில் 183 பேரும்,மட்டக்களப்பு மாவட்டத்தில் 308 பேரும்,அம்பாறை பிராந்தியத்தில் 44 பேரும், கல்முனை பகுதியில் 897 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை 817 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதுடன்,633 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் இதுவரை 8 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.




No comments: