அட்டாளைச்சேனை பகுதியில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்றுறுதி


அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்றைய தினம் மேலும் 10 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் தெரிவித்தார்.

குறித்த 10 பேரும் அட்டாளைச்சேனை பகுதியில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 81 பேர் தொற்றாளர்களாக  இனங்காணப்பட்டுள்ளதுடன் 63 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் ,எமது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட  பிரதேசங்களில் தொடர்ந்து தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் மக்கள்  சுகாதார விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments: