நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த 337 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 305 பேர், மாலைத்தீவிலிருந்து 25 பேர் மற்றும் கட்டாரிலிருந்து 07 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.


No comments: