பண்டிகைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய விதி முறைக்கோவை


கொரோனா தொற்று அதிகாித்தலோடு பண்டிகைக் காலங்களில் பொது மக்களால் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைக் கோவையொன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலங்களில் கடைகள் தோறும் சென்று பொருட்கள் கொள்வனவு செய்வதை மட்டுப்படுத்துமாறு இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை பொருட்கள் வாங்குவதிநிமித்த ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்வது சிறந்தது எனவும் இயலுமானவரை அண்மையில் உள்ள கடைத் தொகுதிகளிலும் சனநொிசல் குறைவான இடங்களுக்கு செல்வதும் சிறந்தது என இவ்விதிமுறைக் கோவையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

No comments: