புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு அனுமதியில்லை


புதுவருட கொண்டாட்டங்களுக்கு இம்முறை சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதே போன்று புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களும் பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவதுடன்,சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமையவும் செயற்பட வேண்டும்.இதேவேளை மீண்டும் வைரஸ் கொத்தணிகள் உருவாகுவதற்கு இடமளிக்கக் கூடாது.

புதுவருட பிறப்பை முன்னிட்டு கடந்த வருடங்களைப் போன்று இம்முறை கொண்டாட்ட நிகழ்வுகள் நடத்த முடியாது.வைரஸ் பரவல் காரணமாக அனைவரும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது கட்டாயமாகும் என குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments: