நாவலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள இலங்கை வங்கிக்கு பூட்டு

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


நாவலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள இலங்கை வங்கி ஒன்று காலவரையின்றி மூ
டப்பட்டுள்ளதாக நாவலபிட்டி பஸ்பாகே பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

குறித்த வங்கி இன்று காலை மூடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


நாவலப்பிட்டி இலங்கை வங்கியில் பணிபுரிந்து வந்த பெண் உத்தியோகத்தரின்
கணவருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்றைய தினம் மூடுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கபட்டது. 

இதேவேளை குறித்த வங்கியில் பணிபுரிந்து வந்த 23 உத்தியோகத்தர்களையும் 14 நாட்களுக்கு சுயதனிமைபடுத்தப்பட்டு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்படவிருப்பதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

தொற்றுக்குள்ளான நபர் கினிகத்தெனை பகுதியினை சேர்ந்தவர் என தெரிவித்த பொது சுகாதார பரிசோகர்கள் நாவலப்பிட்டி பகுதியில் இன்றைய தினம் பொதுமக்களின் நலன்கருதி, நடமாடும் வங்கி சேவையினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: