விவசாயிகளுக்கு கட்டம் கட்டமாக அனுமதி .

தங்களின் பயிர்களை காக்க சுகதாரப்பிரிவினர் கவனமெடுத்து  தங்களை வயற் பிரதேசங்களுக்கு செல்ல அனுமதியளிக்க வேண்டும் என தனிமைப்படுத்தல் பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் 

கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் கீழ்  தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள விசாயிகளுக்கு கடந்த தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் மக்களை பாதுகாக்கும் பொருட்டு நாளை முதல் கட்டம் கட்டமாக விவசாயிகளுக்கு அனுமதிவழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

மேலும் பிரதேச, பிராந்திய விவசாய அமைப்புக்களின் ஊடாக அனுமதிவழங்கப்பட வேண்டிய விசாயிகளின் பெயர் விபரங்கள் விவசாய திணைக்களத்தினுாடாக கிடைக்கும் படசத்தில் அதனடிப்படையில் விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படவிருப்பதாக தெரிவித்தார்.


No comments: