பொது சுகாதார பரிசோதகர் மீது தகாதவாறு நடந்து கொண்டவர் கைது !

பண்டாரகம - அட்டுலுகம பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் மீது உமிழ்ந்து நிந்தித்த கொரோனா தொற்றாளரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று முன்தினம் குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை சிகிச்சைக்காக அழைத்துச்செல்வதற்கு வருகை தந்த பொது சுகாதார பரிசோதகரை நிந்தித்ததோடு அவர் மீது உமிழ்ந்தும்முள்ளார்.

இதனையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதற்கமைய அவர் கைது செய்யப்பட்டதோடு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: