ஆலையடிவேம்பில் தொற்றாளர்கள் அதிகரிப்பதால் சட்ட நடவடிக்கை தீவிரம்

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரையான காலப்பகுதியில் 12 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் குறிப்பிட்டார்

ஆலையடிவேம்பு பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் கொவிட் 19 தொடர்பில் மிக பாதுகாப்பான வலயமாக காணப்படுகின்றது. இன்று (09) ஒரு கொவிட் தொற்றாளர் இனங்காணப்பட்டதுடன் பிரதேசத்தில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 

குறிப்பாக தற்போது  அக்கரைப்பற்று பிரதேசத்திலே மிக அதிகமாக தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர் .

இருப்பினும் ஆரம்பத்தில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் குறைந்தளவு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது  எண்ணிக்கையின் ஏற்றம்  நின்றபாடில்லை அதிகரிப்பை நன்றாக காணக்கூடியதாக உள்ளது.

இதுவரை ஆலையடிவேம்பு பிரதேசத்தில்  முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் மற்றும்  வியாபாரிகள் தொற்றாளருடன் தொடர்புடையவர்கள் என  அனைவருக்கும் அன்ரிஜன் மற்றும் பீ.சீஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்கள் தாமாகவே முன்வந்து பீ.சீ.ஆர்  பரிசோதனையில் கலந்து கொள்வது மகிழ்ச்சியளித்தாலும் ஒட்டு மொத்த மக்களின் ஒத்துளைப்பு மிக அவசியம், 

தற்போதுள்ள  தனிமைப்படுத்தலை நீக்குவது என்பது   மக்களது ஒத்துளைப்பிலே தங்கியுள்ளது   மக்களது பங்களிப்பு 70 வீதம் மாகவே காணப்படுகின்றது. மக்களது பங்களிப்பு 100 வீதமான இருக்கவேண்டும் அப்போதுதான் தனிமைப்படுத்தை எம்மால் நீக்குவது தொடர்பில் சிபார்சு செய்ய இயலும் 

மேலும் முகக்கவசம் அணியதா மற்றும்  தேவையற்று  வீதிகளின் திரிபவர்களுக்கு எதிரா இன்று முதல் கடும்  சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

சட்ட நடவடிக்கை மேற்கொள்வது எமக்கு  விருப்பம் இல்லை இருந்த போதிலும்  மக்கள் ஒத்துளைப்பு இன்மையால் சட்ட நடடிவக்கை மேற்கொள்ள வேண்டடி சூழல் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

No comments: