கொள்ளுப்பிட்டியில் கட்டடம் ஒன்றின் கீழ் தளத்தில் இருந்து ஒருவர் சடலமாக மீட்பு


கொள்ளுப்பிட்டி – டுப்ளிகேஷன் வீதி பகுதியிலுள்ள கட்டடம் ஒன்றின் முதலாவது தளத்தில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6.30 மணியளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை பெய்த மழை காரணமாக, குறித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றின் முதலாவது மாடியில் நீர் நிரம்பியுள்ளது.

குறித்த தளத்திலிருந்த ஊழியர் ஒருவர் அப்பகுதியிலிருந்து வௌியேற முடியாமல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 மணித்தியாலங்களாக மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கட்டடத்தின் கீழ் தளத்தில் மேலும் 5 பேர் சிக்கியிருந்த நிலையில் அவர்கள் இன்று காலை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: