வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலி

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


லிந்துலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மெரேயா ஊவாகலபகுதியில் சிறியரக டிப்பர்

வண்டி ஒன்று நூறு அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 33 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் 15.12.2020. செவ்வாய்க்கிழமை காலை 10.30மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

லிந்துலை மவுசாஎல்ல பகுதியில் இருந்து மெரேயா வெள்ளிமலை பகுதியில் உள்ள
வீதி அபிவிருத்தி பணிக்காக வீதி புனரமைப்புக்கான உபகரணங்கள்,சீமெந்து மூட்டைகள் மற்றும் ஊழியர்கள் 09 பேரை ஏற்றி கொண்டு சென்ற வேளை மேரேயா
ஊவாகலை பகுதியில் வைத்து குறித்த டிப்பர் வண்டி விபத்துக்குள்ளானது.

வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றதாகவும்
விபத்தில் பலியான நபர் லிந்துலை ஊவாஎல்ல பகுதியை சேர்ந்த 33வயதுடைய ஒரு
பிள்ளையின் தந்தையான லிந்துலை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம் லிந்துலை வைத்தியசாலையின் பிரேத
அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை
லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments: