நத்தார் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் கால தேவைகளுக்கு கடனுதவிகளைப் பெற்றுக்கொடுக்க அரசு தீர்மானம்


பண்டிகைக் காலங்களில் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் கடனுதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நத்தார் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு ஒவ்வொரு குடும்பத்திற்குக் குறைந்த வட்டிக்குக் கடனுதவிகளைப் பெற்றுக்கொடுக்க அரசு தீர்மானித்துள்ளது.

அதன்படி, கடன் வசதிகள் 3 வகைகளின் அடிப்படையில் வழங்கப்படுவதோடு மாதமொன்றிற்கு 50,000 இற்கும் அதிகமான சம்பளம் பெறுவோர் அல்லது வருமான மீட்டுவோருக்கு 50,000 ரூபா கடன் பெற்றுக்கொடுக்கப்படும்.

மாதச் சம்பளம் அல்லது வருமானம் ரூபா 25,000 – 50,000 வரை பெறுவோருக்கு 25,000 ரூபா கடனுதவியும், மாதச் சம்பளம் அல்லது வருமானம் ரூபா 25,000 இற்கும் குறைந்தவர்களுக்கு ரூபா 10,000 கடனுதவியும் வழங்கப்படும்.

இச்சலுகையை இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் சமுர்தி வங்கி போன்ற வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: