அம்பாறை ஆலைடியவேம்பில் தொடர்ச்சியாக பீ.சீ.ஆர் பரிசோதனைகள்.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த 26ம் திகதி தொடக்கம் தனிமைப்படுத்தல்  அமுல்படுத்தப்பட்டுள்ளது அட்டாளைச்சேனை , அக்கரைப்பற்று , ஆலையவேம்பு ஆகிய பிரதேசங்கள் 10 வதுநாளாகவும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் நேற்றைய முடிவுகளின் அடிப்படயில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் 129 தொற்றாளர்களும் 30ம் திகதி  மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மேலும் 09 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஆலைடிவேம்பு பிரதேசத்தில்  06 தொற்றாளர்களும் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 21 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்த  தெரிவித்த ஆலைடியவேம்பு, அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் ஆலைடியவேம்பு பிரதேசம் தற்போது பாதுகாப்பாக உள்ளது 14 நாட்கள் நிறைவில் தனிமைப்படுத்தலை தளர்த்துவது தொடர்பில் பீ.சீ.ஆர் முடிவுகள் நிமித்தம் முடிவெடுக்கப்படும்.

மேலும் இதுவரையில் பிரதேசத்தில் 06 தொற்றாளர்கள் மாத்திரம் இனங்காணப்பட்டுள்ளதாகவும் 30ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் முடிவுகள் முற்றுமுழுதாக இதுவரை கிடைக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இன்று ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் 50 பீ.சீ,ஆர் பரிசேதனைகளும் கோளாவில் விநாயகர் வித்தியாலயத்தில் மேலும் 50 பீ.சீ.ஆர் பரிசோதனைகளும் மேற் கொள்ளப்படவுள்ளதகவும் அவர் குறிப்பிட்டார்.

இந் நிலையில் திருக்கோவில் பிரதேசத்தில் தம்பிலுவில், விநாயகபுரம் , சங்கமன் கிராமம் ஆகிய பகுதிகளில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன்  திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 08 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் திருக்கோவில் பிரதேசத்தில் தனிமைப்டுத்தல்  தொடர்பில் உரிய தரப்பினரால் இதுவரை எது வித அறிவுறுத்தல்களும் மக்களுக்கு வழங்கப்படவில்லை.

No comments: