கிழக்கில் முதல் தடவையாக கொவிட் தொற்றாளர் ஒருவர் மரணம் !

கிழக்குமாகாணத்தில் கொவிட் தொற்றாளர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பில் கிழக்குமாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகர் அவர்கள் குறிப்பிடுகையில்.

கிழக்கு கல்முன பிராந்தியத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார் குறித்த நபர்   சம்மாந்துறை பிரதேசத்தினை சேர்ந்தவர் என்றும் 80 வயதுடைய நபரே நேற்றையதினம் உயிரிழந்ததாகவும் குறித்த நாருக்கு மூன்கூட்டியே கொவிட் 19 தொற்று இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தகது.

மேலும் குறித்த நபர் கல்முனை அஷ்டரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்படும் போது மரணமடைந்ததாகவும் .

சம்மந்தப்பட்டவரின் பிரதேம் தற்போது அஷ்டரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மரணவிசாரணை அதிகாரியின் விசாரணைகளை தொடர்து மேலதிக நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என்றும் தெற்கு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

No comments: