அம்பாறை அறுகம்பை (உல்லே) பகுதி தனிமைப்படுத்தப்பட்டது.

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அறுகம்பை பிரதேசமானது மறு அறிவித்தல்வரை தனிமைப்படுத்ப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் (AU. அப்துல் சமட்) தெரிவித்தார்.

நேற்றைய தினம் பொத்துவில் பிரதேசத்தில்  இனங்காணப்பட்ட 12 தொற்றாளர்களும் அறுகம்பை பிரதேசசத்தை சேர்ந்தவர்கள் என்பதனால் குறித்த பகுதி இன்று காலை அமுலாகும் வரையில் மறு அறிவித்தல் இன்றி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் இதுவரையில் பொத்துவில் பிரதேசத்தில் 20 தொற்றாளர்கள் இகங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

நேற்றையதினம் இனங்காணப்பட்ட 12 தொற்றாளர்களில்  11 தொற்றாளர்கள் பொத்துவில் பிரதேசத்திலும் 1 தொற்றாளர் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலும் இனங்காணப்பட்டிருந்தனர். 

No comments: