நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பற்றிய விபரம்


நாட்டில் நேற்றைய தினம் மேலும் 460 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 418 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதில் 35 பேர் சிறைச்சாலை கொரோனா கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பதுடன் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 38,343 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 42,063 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 7,943 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33,925 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வெள்ளம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவர், ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் கடுமையான சிறுநீரக நோய் காரணமாக 2020 டிசம்பர் 28ம் திகதி உயிரிழந்துள்ளார்.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 195 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: