சம்மாந்துறை கல்வி வலயத்தில் கல்வி நடவடிக்கை ஆரம்பிக்க கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் பரிந்துரையை
கொவிட் 19 தொடர்பான விசேட செய்தியாளர் சந்திப்பு இன்று அம்பாறை மாவட்டம் மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம் பெற்றது
இதன்போது கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அ.லதாகரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
பொதுமக்களின் பொருளாதாரமும் மிக முக்கியமானது கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்காக எமது பொருளாதாரத்தை கை விட்டுவிட இயலாது.
அக்கரைப்பற்று பிராந்திய விவசாயிகளின் நலன் கருதி அவர்கள் விவசாயத்தில் ஈடுபடும் வகையில் சுழற்சி முறை தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளோம்.
திங்கட்கிழமை முதல் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு அனுமதியளிக்கும் செயற்றிட்டம் கட்டம் கட்டமாக இடம்பெறும்.
பாடசாலை மாணவர்களின் எதிர்காலம் குறித்து நாங்கள் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் கடந்த காலங்களில் கிழக்கு ஆளுநரினால் அம்பாறை மாவட்டத்தில் தொற்று அதிகரித்ததை தொடர்ந்து பாடசாலைகள் மூட உத்தரவிடப்பட்டிருந்தது.
குறித்த பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நாங்கள் இன்று கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளருடன் இணைந்து தீர்மானித்துள்ளோம்.
இதன்போது கல்முனை சம்மாந்துறை கல்வி வலயத்தில் தரம் 10 11 12 13 மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கை ஆரம்பிக்க பரிந்துரையை வழங்கி உள்ளோம். இதன் இறுதி முடிவு கிழக்கு மாகாண ஆளுநரால் எடுக்கப்படும் என்றார்.
No comments: