சட்டவிரோதமான முறையில் உலர்ந்த மஞ்சள் இறக்குமதி செய்து விநியோகிப்பதற்கு முற்பட்ட நபரொருவர் கைது


சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்து விநியோகிப்பதற்கு ஆயத்த நிலையில் இருந்த உலர்ந்த மஞ்சள் 1950 கிலோகிராம் 420 கிராமுடன் நபரொருவர் மட்டக்குளிய - களனி கஹமோல வீதியில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது இம்மஞ்சள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்குளி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: