ஆலைடியவேம்பு பிரதேசத்தில் மேலும் ஒரு தொற்றாளர். அடையாளம்

இன்று முதல் ஆலைடியவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் உள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆலைடியவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் தெரிவித்தார்.

 NEW UPDATED 

ஆலைடியவேம்பு  கண்னகிபுரம் பகுதியில் கடந்த 03ம் திகதி மேற் கொள்ளப்பட்ட பீ.சீஆர் பரிசேதனையில் ஒரு தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் மொத்தமாக ஆலைடியவேம்பு பிரதேசத்தில 08 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.

இன்று கண்னகிபுரம் பகுதியிர் 25 அன்ரிஜன் பரிசோதனைகளும் தர்மசங்கரி மைதானத்தில் 50 பீ.சீ.ஆர் பரிசேதனைகளும்  மேற் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில் நாளாந்தம் 400 விவசாயிகளுக்கு மாறு பட்ட நிறங்களில் அனுமதி அட்டைகள் வழங்கும் நடவடிக்கை நேற்றைய தினம் முதல் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த 26ம் திகதி முதல் கொவிட் தொற்றின் தாக்கம் திருப்தியின்மையால்  விவசாயிகளுக்கு வயல் நிலங்களுக்குச் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் மக்களின் பொருளாதார நலன் கருதி குறித்த முடிவு எடுக்கப்பட்டிருதமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆலைடியவேம்பு பிரதேசம் தற்போது பாதுகாப்பாக உள்ளதாகவும் மக்கள் ஒத்துளைப்பு வழங்கினால் 14 நாட்கள் நிறைவில் தனிமைப்படுத்தலை நீக்க சிபார்சு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

கிழக்கில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட அக்கரைப்பற்று, ஆலைடியவேம்பு, அட்டாளைச்சேனை பகுதிகளைச் சேர்ந்த பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை ஆரம்பிக்கப்பட மாட்டாது .

No comments: