அம்பாறை ஆலையடிவேம்பில் தொடரும் பீ.சீஆர் பரிசோதனைகள்

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பில் தொடர்ந்து தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவரும் வேளையில் கிழக்குமாகாண சுகாதார பணிப்பாளரின் வைத்தியர் அ.லதாகரனின்  மேற்பார்வையின் கீழ் கல்முனை சுகாதார பணிமனை பணிப்பாளர் வைத்தியர்.கு.சுகுணன் அவர்களின் வழிகாட்டுதலில் ஆலையடிவேம்பு  பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் .எஸ். அகிலனின் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில்  தொடர்ச்சியாக பீ.சீ.ஆர் பரிசேதனைகள் மேற் கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் இன்று ஆலையடிவேம்பு பிரதேச சபை மற்றும் நெக்கோட் கட்டிடம் மற்றும் புளியம்பத்தை ஆகிய பிரதேசங்களில் பீ.சீ.ஆர் பரிசேதனைகள் மேற் கொள்ளப்படும் என்று ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் குறிப்பிட்டார்.

 மேலும்  05ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் 01 தொற்றாளரும் 06ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் 02 தொற்றாளர்களுமாக நேற்றையதினம்  (09)  மொத்தம் 03 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதகவும் இதுவரையில் மொத்தம் 14 தொற்றாளர்கள் அடையாயப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் நேற்றைய தினம் மாலை 08.18 மணியளவில் வெளிவந்த Eastern Province covid19 Exposure History யில் 

அம்பாறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாகிய அட்டாளைச்சேனை பகுதியில் 32 தொற்றாளர்களும் அக்கரைப்பற்று பகுதியில் இதுவரை 233 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments: