யாழில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை


யாழ்ப்பாணம் மருதனார் மடத்துடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆக உயர்வடைந்துள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன்  தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 6 பேரும், தெல்லிப்பழையைச் சேர்ந்த 3 பேரும், நல்லூர், சண்டிலிப்பாய் ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்த தலா 2 பேரும் இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: