கல்விப் பொதுத் தராதர சாதாரண தர முன்னோடிப் பரீட்சை ஜனவரி 9ம் திகதி ஆரம்பம்


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சை ஜனவரி மாதம் 9ம் திகதி ஆரம்பமாகவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.

11 பாடவிதானங்களுக்கான முன்னோடிப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைகளை மதிப்பீடு செய்யும் பணிகள் அடுத்த மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும்,ஐந்து கட்டங்களின் கீழ் 17 நகரங்களில் இந்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை விடைகளை மதிப்பீடு செய்யும் பணிகள் கடந்த 25ம் திகதி ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.

No comments: