நாட்டில் மேலும் ஐந்து கொரோனா மரணங்கள் பதிவு


கொரோனா தொற்றினால் மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 204 ஆக அதிகரித்துள்ளது.

தர்கா பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும், ஹோமாகமை பிரதேசத்தை சேர்ந்த 59வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 05 பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவரும், கலேவெல பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் பெல்மடுல்ல பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: