நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்


நாட்டில் நேற்றைய தினம் 688 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 33,478 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு இனங்காணப்பட்டவர்களில் 627 பேர் போலியாகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலில் இருந்த 3 கடலோடிகளுக்கும் நேற்றைய தினம் கொரோனா தொற்றுறுதியானது.

இதன்படி, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை,பேலியாகொடை மீன்சந்தை மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 29,837 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 24,309 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதோடு,9015 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: