வார்த்தையை செயலாக்கிய அங்கஜன் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் நீதி அமைச்சிடம் மகஜர் கையளிப்பு !


தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அரசில் அங்கம ; வகிக்கும் தமிழ் பேசும்உறுப்பினர்கள் கூட்டாகக் கோரிக்கை நீதி அமைச்சரைச் சந்தித்து மகஜர் கையளிப்பு நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கூட்டாகக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மகஜர் ஒன்று நேற ;றையதினம் (05) அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. 

குறித்த மகஜரை குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், இராஜாங்க அமைச்சர்வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான் மற்றும் மருதபாண்டி இராமேஸ்வரன் ஆகியோர் நீதி அமைச்சரிடம் கையளித்தனர்.

தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக தடுத துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிப்பதற்குநடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

அரசாங்கததில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தால், சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினரையும் அழைத்து இதுபற்றிக் கலந்துரையாட முடியும் என்றும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அரசியல் கைதிகள் விடயத்தில் கொள்கை ரீதியான த Pர்மானம ; எடுக்கப்பட்டால் இது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டிருந்தார். அது மாத்திரமன்றி புதிய அரசியலமைப்புத் தயாரிப்பு விடயத்தில் அரசாங்கத்தில் அங்கம்

வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்களின் நிலைப்பாடுகளும் உள்வாங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், இது தொடர்பில் எழுத்துமூலமான யோசனைகளை முன்வைக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

கைதிகள் விடுதலை மாத்திரமன்றி சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும ; பல்வேறு பிரச்சினைகளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து ஜனாதிபதியிடம் எடுத்துச் செல்வதற் கு நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமை தாங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற ;கு அமைச்சர் இணக்கம ; தெரிவித தார்


No comments: