நேற்றைய தினம் பதிவான கொவிட் மரணம் தொடர்பிலான மேலதிக தகவல்கள்


பிலியந்தலை பகுதியை சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் கொவிட்-19 தொற்று உறுதியானவராக இனங்காணப்பட்டார்

பின்னர் குறித்த நபர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.

இந்தநிலையில் நேற்றைய தினம் அவர் உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் பதிவான மொத்த கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 130ஆக உயர்வடைந்துள்ளது.

கொவிட்-19 நிமோனியாவால் அதிகரித்த பக்டீரியா தொற்று,

மற்றும் இருதய நோய்,

 என்பன குறித்த நபரின் மரணத்திற்கான காரணம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: