கொரோனா தொற்று ; ஆலையடிவேம்பில் தொடர் பரிசோதனைகள்.


 கடந்த 26ம் திகதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் ஆலைடியவேம்பு ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் மறு அறிவித்தல் இன்றி இன்று 18வது நாளாகவும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 10ம் திகதி ஆலைடியவேம்பு பிதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசேதனையில் இரு தொற்றாளர்கள் இறுதியாக இனங்காணப்பட்டதனை தொடர்ந்து பிரதேசத்தில் மொத்தம் 18 தொற்றாளர்பள் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளதாக ஆலைடியவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். அகிலன் குறிப்பிட்டார்.

அதனடிப்படையில் தினசரி ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொரோனா தொற்று தொடர்பான பீ.சீ.ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகன் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனடிப்படையில் இன்று ஆலைடியவேம்பில் 50 அன்ரிஜன் பரிசேதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார.

மேலும் இதுவரையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய 10 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments: