மொத்த விற்பனையாளருக்காக மட்டும் பேலியகொட மீன் சந்தை மீண்டும் திறக்கப்படும்

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பேலியகொடை மீன் சந்தையை, நாளை முதல் மொத்த வியாபார நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, நாளை முதல் திறக்கப்படவுள்ளதாக, கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

வர்த்தகர்களின் கோரிக்கைக்கு இணங்கவே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேலியகொட மீன்சந்தையில் முழுமையான புதுப்பித்தல் சுகாதார அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும் வரை கொவிட்-19 அபாயத்தைக் குறைப்பதற்காக சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மொத்த விற்பனைப் பரிமாற்றம் மட்டுமே செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: