சட்டவிரோத மாணிக்கல் அகழ்வு தடுத்து நிறுத்த கோரிக்கைஎஸ்.சதீஸ்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி, போற்றி பகுதியில் இரவுவேளைகளில் சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு இடம்பெறுவதாக பிரதேச மக்கள்குற்றஞ்சாட்டுகின்றனர்.

இவ்வாறு மாணிக்கக் கல் அகழ்வு இடம்பெறுகின்றமையினால் குறித்த பகுதியில்பாரிய குழிகள் தோன்றியுள்ளதாகவும் இதனால் தாம் அச்சமான சூழ்நிலையில்வாழ்வதாகவும் பிரதேச மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

காசல்ரீ நீர்த்தேக்கத்துடன் இணையும் கெசல்கமுவ ஓயாவில் மணிக்கக் கல்
அகழ்வின்போது எடுக்கப்படும் இல்ல மண்களை கெசல்கமுவ ஓயா ஆற்றில் வைத்துகழுவப்படுவதனால், அந்த மண் அரித்துச்செல்லப்படுவதானால் காசல்ரீ
நீரேந்தும் பகுதிகளில் நன்னீர் மீன் உற்பத்தித்துறையும் பாதிக்கப்படுவதாக
தெரியவருகின்றது.

ஆகவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்குமாறு
பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments: