இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று !.

ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட நோர்வுட் தமிழ் மகாவித்தியாலயத்தில்
தரம் 09ல் கல்வி பயின்று வந்த இரண்டு மாணவர்களுக்கு கொரோனா தொற்று
உருதிசெய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொதுசுகாரதார அதிகாரிகள்
தெரிவித்தனர் 

12.12.2020.சனிகிழமை வெளியான பி.சி.ஆர் அறிக்கையின் ஊடாக
இந்த இரண்டு மாணவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது

 கடந்த சனிகிழமைநோர்வுட் தமிழ் மகாவித்தியாலயத்தில் பணிபுரிந்து வந்த ஆசிரியை ஒருவருக்குதொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து குறித்த பாடசாலையில் பணிபரிந்து வந்த74ஆசிரியர்கள் மற்றும் 150கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பி.சி.ஆர்பரீசோதனை முன்னெடுக்கபட்டிருந்த நிலையில் இந்த இரண்டு மாணவர்களுக்கும்தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த கொரோனா தொற்றுக்கு உள்ளான இரண்டு மாணவர்களும் நோர்வுட் வெஞ்சர்அப்பலோரன்ஸ் தோட்டபகுதியை சேர்நதவர்கள் இதே வேளை குறித்த தோட்டபகுதியில் தொற்றுக்கு உள்ளான மாணவியின் தந்தை வெஞ்சர் தோட்ட காரியாலத்தில் தபால்சேவையில் ஈடுபட்டு வந்தமையினால் குறித்த காரியாலயம் காலவரையின்றிழூடப்பட்டுள்ளது 

இந்த மாணவர்களோடு தொடர்புகளை பேணிவந்த 12குடும்பங்களைசேர்ந்த 60பேர் 14நாட்களுக்கு சுயதனிமைபடுத்தபட்டுள்ளதோடு குறித்த12குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு பி.சி.ஆர் பரீசோதனை மேற்கொண்டு அதன்மாதிரிகள் நுவரெலியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ சுகாதார
வைத்திய அதிகாரி தெரிவித்தார். 

வெஞ்சர் அப்பலோரன்ஸ் தோட்டபகுதியில் இரண்டுமாணவர்களுக்கு ஏற்பட்ட தொற்று காரனமாக குறித்த தோட்டமக்களுக்குதொழில்வாய்பு முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது தொற்றுக்கு உள்ளான இரண்டு மாணவர்களை தனிமைபடுத்தல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments: