நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனாதொற்றுப் பரவல் அச்சம் காரணமாக நாடு திரும்ப முடியாது சிக்கித் தவித்த மேலும் 210 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

அதன்படி கனடாவிலிருந்து 130 பேரும் கட்டாரிலிருந்து 80 பேரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு,அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: