சூறாவளியின் போது மேற்கொள்ள வேண்டியவைசெ.துஜியந்தன்

சகலவிதமான மின்சார தொடர்புகளையும் துண்டித்து விடுதல்.

குழந்தைகள், வயோதிபர்கள், விசேட தேவைகுட்பட்டோர்களையும் வீட்டின் உறுதியான பாதுகாப்பான பகுதியில் வைத்திருத்தல்.

சுவரின் மேல் தொங்கும் கடிகாரம், புகைப்படங்களை கழட்டி வைத்தல்.

உறுதியான பாதுகாப்பான பகுதியில் பொருட்களை (சான்றிதழ்கள், உறுதிகள், முக்கியமான ஆவணங்களை பொலித்தீனால் மூடி பாதுகாப்பாக வைத்திருத்தல்)

மீன்பிடிப் படகுகளை நன்கு நங்கூரமிட்டு நிறுத்தி வைத்தல். மீன்பிடி உபகரணங்களை உயரமான பகுதிக்கு எடுத்துச் செல்லல்.

உங்களது வீடு அல்லது கட்டிடம் உடையக்கூடிய நிலையில் இருந்தால் தலையணை, மெத்தை, காபட், பிளங்கட் போன்றவற்றால் உங்கள் தலைகளை மூடி உறுதியான மேசையின் கீழ் உட்காருங்கள்.

காற்றின் வேகம் குறையும் போது சூறாவளி நின்று விட்டது என எண்ணி விடாதீர்கள் வேறு திசைகளில் கடும் காற்று வீசக்கூடும். சூறாவளி அபாயம் நீங்கி விட்டது என அறிவிக்கும் வரை பாதுகாப்பான இடங்களிலே இருங்கள்.

வாகனத்தினுள் இருப்பின் கடலோரம், ஆற்றோரம் தூரமாகி திறந்த பகுதிகளுக்கு சென்றுவிடுங்கள்.

No comments: