நத்தார் தின வாழ்த்து செய்தி - நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்

தலவாக்கலை பி.கேதீஸ்


யேசு கிறிஸ்து பிறப்பான இன்று அனைவருக்கும் இன்முகத்துடன் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைவதுடன் இம்முறை அனைவரும் வீட்டிலிருந்து தமது நத்தார் பண்டிகையை கொண்டாடுமாறும் தெரிவித்துக்கொள்கின்றேன் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


அவரது நத்தார் பண்டிகையை வாழ்த்து செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எமது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 கொரோனா தொற்று இரண்டாவது தடவையாகவும் அதி வேகமாக பரவிவருகின்றது. இன்றைய சூழ்நிலையில் இந்த தொற்றிலிருந்து எம்மையும் எமது உறவினர்களையும் நண்பர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக நாம் பாதுகாப்பு சுகாதார நடவடிக்கைகளை பின் பற்றவேண்டும். 

அத்தோடு கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் மீண்டுவரவேண்டும். என்பதற்காக மதஸ்தலங்களிலும் வீடுகளிலும் பிராத்தனைகளையும் மேற்கொள்வோம். ஏழை மக்களின் வாழ்வில் இன்பம் கிட்டவேண்டும் என்பதற்காகவே கன்னி மரியாள் வயிற்றில் ஏழ்மையின் அவதாரமாய் அவதரித்தவர் யேசு கிறிஸ்து. அவரின் பிறப்பு மிக எளிமையானது அவரின் பிறப்பானது ஏழை மக்களின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்ப்படுத்தியது. 

இன்று உலகிற்கு புதிய வெளிச்சத்தை உருவாக்கி ஏழை மக்களுக்காகவே அவதரித்த குழந்தை யேசு பிறந்த இந்நாளில் நாம் உறுதி எடுத்துக் கொண்டு எமது வாழ்வில் சிறந்த மாற்றங்களைக் நோக்கி பயணிப்போம்.எதிர்வரும் காலங்களை நாமே சிறப்பாக்கிக் கொள்ளும் மன உறுதியை நாம் பெற வேண்டுமென  வாழ்த்துகிறேன் என்றார்.

No comments: