காணி அபகரிப்புக்கு எதிராக அட்டன் ஹெரோல் தோட்ட தொழிலாளர்கள் ஆர்பாட்டம்(எஸ்.சதீஸ்)

அட்டன் பெருந்தோட்ட கம்பனிக்குற்பட்ட அட்டன் ஹெரோல் தோட்டத்தொழிலாளர்பணிபகிஷ்கரிப்பு ஆர்பாட்டமொன்றை மேற்கொண்டனர்

தோட்ட காணியை வெளியார் சில ஆக்கிறமிப்பதற்கு எதிராகவே 12/12/2020 இந்த
ஆர்பாட்டத்தை தொழிலாளர்கள் முன்னெடுத்தனர்

ஹெரோல் தோட்டத்தில் நீண்காலமாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம் ஆனால் தோட்டகாணியை வெளியார் துப்பரவு செய்து உரிமை கொண்டாடுகின்றனர் தோட்ட காணியைவிட்டுக்கொடுக்க முடியாது என ஆர்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்

ஆர்பாட்ட இடத்திற்கு சென்ற அட்டன் பொலிஸார் மற்றும் தோட்ட முகாமையாளர்குறித்த காணியை வெளியார் துப்பரவு செய்து ஆக்கிரமித்திருப்பது தொடர்பில் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததுடன் தோட்ட காணியைஅபகரித்துள்ளவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து நீதிமன்றில் ஆஜர்படுத்துவதாக ஆர்பாட்ட காரர்களிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்

No comments: