அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் நீக்கப்படுமா ?


கடந்த 2020.11.26ம் திகதி அக்கரைப்பற்று மீன் சந்தை பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்பட்டுள்ளதனையடுத்து அன்று மாலை ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை உள்ளிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது

இந் நிலையில் நேற்று வரையிலான காலப்பகுதியில் அக்கரைப்பற்றில் 122 , ஆலையடிவேம்பில் 06 அட்டாளைச்சேனையில் 21 என கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஆலைடிவேம்பு பிரதேசத்தில் இன்று 50 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற் கொள்ளப்டவுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் தெரிவித்தார்.

மேலும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தலானது 26ம் திகதியில் இருந்து  14 நாட்களுக்கு அமுல் படுத்தப்பட்டுள்ளதாகவும். குறித்த தனிமைப்படுத்தலை நீக்குவது தொடர்பில் பீ.சீ.ஆர் பசிசோதனை முடிவின் படி தீர்மானிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். 


No comments: