பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் விடயத்தில் தொழிலாளர்களை அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றி வருகிறது

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


மலையகபெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள விடயத்தில்

தொழிலாளர்களை அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாக மக்கள் விடுதலை
முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.

15.12.2020 செவ்வாய்கிழமை ஹட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார். 

கடந்த மார்ச் மாதம் புதிய அரசாங்கத்தின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மார்ச் முதலாம்
திகதி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுமென
அறிவித்தார். 

அப்போது நாம் பாராளுமன்றத்தில் வைத்து நாம் வினவினோம்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நிச்சயமாக ஆயிரம் ரூபா சம்பளம்
வழங்கமுடியுமா? இதனை நிறைவேற்ற முடியுமா? என கோல்வி எழுப்பியிருந்தோம்.

அப்போது அவர் சிரித்து கொண்டே,2020ம் ஆண்டு ஜனவரி மாதம்
வழங்குவோம் என கூறினா.ர் அவ்வாறு பொய்யான வாக்குறுதிகளை கூறி மலையக
மக்களுடைய வாக்குகளை பெற்றார். மலையக மக்களை மீண்டும் ஏமாற்றினார். ஆனால்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படவில்லை. 

2020ம் ஆண்டுக்கான வரவு செலுவு திட்டம் வாசிக்கப்பட்ட போது பெருந்தோட்ட
தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் எதுவும் அறிவிக்கபடவில்லை. இருந்த
போதிலும் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படுமென மீண்டும்
உறுதிமொழி வழங்கியுள்ளார். 

இது முதலாவது தடவை அல்ல, இரண்டாவது உறுதி மொழி அல்ல, இது ஜந்தாவது உறுதிமொழியாகும். ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கபடுமாகயிருந்தால் முதலாளிமார் சம்மேளனம் இணக்கபாட்டுக்கு வந்திருக்கவேண்டும். 

முதலாளிமார் சம்மேளனம் தெளிவாக அறிவித்திருக்கிறது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு
ஆயிரம் ரூபா வழங்க முடியாதென அறிவித்துள்ளது.அவ்வாறு ஆயிரம் ரூபாய்
வழங்கப்படுமானால் திரைசேரியில் இருந்து அதற்கான நிதி ஒதுக்கீடு
செய்திருக்கவேண்டும். வரவு செலவு திட்டத்தில் அவ்வாறு நிதி ஒதுக்கீடு
செய்யப்படவில்லை.

பெருந்தோட்ட நிறுவனங்கள் ஆயிரம் ரூபாய் வழங்க முடியாவிட்டால் அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். 

மலையக பெருந்தோட்டப்பகுதியில் 15480 பேர் தொடர்ந்தும் தற்காலிக தகர கூடாரங்களிலும் பொலித்தினால் மறைக்கபட்ட கூடராங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கான முறையான மலசலகூடங்கள் இல்லை.

குளிரிலும் மழையிலும் அட்டைக்கடியிலும், குளவி தாக்குதலுக்கும் முகம் கொடுத்தும் குறைந்தளவிலான சம்பளத்தினை பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெறுகிறார்கள். 

இன்று அரச உத்தியோகத்தர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்படுவது போல பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் மாதாந்த சம்பளம்
வழங்கப்பட வேண்டும்.

தற்பொழுது வழங்கப்படுகின்ற சம்பளம் கூட அடிப்படை சம்பளம் அல்ல.கொடுப்பனவுகள் போன்றவற்றை இணைத்தே இந்த 750 ரூபா வழங்கப்படுகிறது என குறிப்பிட்டார்.

No comments: