ஜனாஸா எரிப்புக்கு எதிராக எட்டு வயது சிறுவனின் கவனயீர்ப்பு பாதை நடைபவனி கல்முனையில் ஆரம்பம்

எஸ்.அஷ்ரப்கான்


ஜனாஸா எரிப்புக்கு எதிராக கல்முனையைச் சேர்ந்த எட்டு வயது சிறுவனும் அவரது தந்தையும் வெண் துணி கவனயீர்ப்பு நடைபவனி ஒன்றினை கல்முனையில் இருந்து சாய்ந்தமருது வரை கால்நடையாகச் சென்று தமது அமைதி வழி போராட்டத்தினை நடாத்தினர். 

இன்று (28) திங்கள் கிழமை காலை 9.30 மணிக்கு கல்முனையில் ஆரம்பமான இந்த நடைபவனி, கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் அநியாயமாக பலாத்காரமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு துஆப் பிரார்த்தனைகள் செய்த பின்னர், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீரிடம் மகஜர் ஒன்று குறித்த தந்தை மற்றும் மகனால் கையளிக்கப்பட்டு  நடைபாதை ஆரம்பமானது.

பின்னர் சாய்ந்தமருது பிர தேச செயலகத்திற்குச் சென்று பிரதேச செயலாளரிடமும் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

இங்கு குறித்த நடைபவனியில் அரசியல் பிரமுகர்கள்,உலமாக்கள், பிரதேச முஸ்லிம்களும்  முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி பேணி கலந்து கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.



No comments: