க.பொ.த சாதாரணதர பரீட்சை திகதி அறிவிப்பு2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையினை எதிர்வரும் ஜனவரி மாதம் நடாத்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: