களுவாஞ்சிகுடியில் பி.சி.ஆர் பரிசோதனைசெ.துஜியந்தன்

மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி சுகாதாரப்பணிமனையினால் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

பிராந்திய சுகாதரப்பணிமனையின் வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில் தொடர்ச்சியாக இப் பிரதேசத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 

இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் பிரதேசத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுகின்றவர்கள், கொழும்பில் இருந்து வருகைதந்தவர்கள, பொலிஸ் உத்தியோகத்தர்கள்; என 50 பேர் கலந்துகொண்டனர்.

மண்முனை தென் எருவில் பற்று பிராந்தியத்தில் இதுவரை 365 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவற்றில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என பிராந்திய சுகாதாரப்பணிமனை தெரிவித்துள்ளது.

No comments: