அக்கரைப்பற்று தெற்குப் பகுதியில் நாளை உணவகங்களை திறக்க அனுமதி

வடிவேல் டினேஸ்                                                                                                                              

அக்கரைப்பற்று தெற்கு (ஆலையடிவேம்பு) பகுதியில் நாளை முதல் உணவகங்களை சில கட்டுப்பாடுகளுடன் திறக்க முடியும் என பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் குறிப்பிட்டார்.

அக்கரைப்பற்று தெற்கு (ஆலையடிவேம்பு) பிரதேசத்தில்  அக்கரைப்பற்று 8/1,அக்கரைப்பற்று 8/3,அக்கரைப்பற்று 9 ஆகிய பகுதிகளைத் தவிர்த்து ஏனைய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

மேலும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார பாதுகாப்பினை மக்கள் முக்கியமாக கடைப்பிடித்தே ஆக வேண்டும் என பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.
 
மேலும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ள 3 பிரதேசங்களில்  தினமும் பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்று வருவதுடன் சுகாதார நடைமுறைகள் இறுக்கமான முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.

மேலும் நாளை திறக்கப்படும் உணவகங்களில் யாரும் உணவருந்த முடியாது என்பதுடன் உணவுப் பொதிகளை மாத்திரமே பெற்றுச்செல்ல முடியும் எனவும் குறிப்பிட்டார்.

 மேலும்,அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான சிகை அலங்கார நிலையங்கள் தொடர்பில் இதுவரை எதுவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் இது தொடர்பில் கூடிய விரையில் முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.No comments: