விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு - சுற்றுலா பயணிகளுக்கு கடுமையான சுகாதார நடைமுறைகள்விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானால் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் முடித்த பின்னரே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

விமான நிலையத்தில் நேற்று மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆரம்ப சுகாதார மற்றும் கொரோனா கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்தல் நடைமுறைகளைப் பின்பற்றுவதை அவதானிப்பதற்கும் அவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்வதற்குமான திட்டங்கள் விமான நிலையத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் காலமான 14 நாட்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் தமது சுற்றுலா தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

No comments: