இலங்கை விமானப்படையின் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானது


இலங்கை விமானப் படைக்குச் சொந்தமன பி.ரி.-6 ரக பயிற்சி விமானம் ஒன்று கந்தளாய் பகுதியில் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமகோணலை சீனன் குடாவிலிருந்து பயிற்சிக்காக புறப்பட்ட சில நிமிடங்களில் நண்பகல் 1.30 மணியளவில் இதன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது. கந்தளாய் சேருவில பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

சற்று முன்னர் கிடைத்த தகவலின்படி கந்தளாய் பகுதியில் இது விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானி ஒருவருடன் பறந்துகொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: