சவூதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பவுள்ள இலங்கையர்கள்


சவூதி அரேபியாவில் பணிபுரியும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாட்டுக்குத் திரும்பத் தயாராக இருக்கின்றனர் என்று றியாதில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் நிர்க்கதியான நிலையிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் செயன்முறையை இலங்கை ஆரம்பித்துள்ள நிலையில், சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு இலட்சத்து 35 ஆயிரம் இலங்கையர்கள் பல்வேறு தேவைகளுக்காகவும், தொழில்வாய்ப்புகளுக்காகவும் சவூதி அரேபியாவில் வசித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதியிலுள்ள இலங்கையர்களில், பல்வேறு மருத்துவ சிக்கல்களில் உள்ளவர்களுக்கே முதலிடம் அளிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில், சவூதி அரேபியாவில் இருந்து 391 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: