கிழக்கில் நாளை பாடசாலைகள் ஆரம்பம்

அக்கறைப்பற்று பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களைத் தவிர்ந்த கிழக்கு மாகாணத்தின் சகல பாடசாலைகளும் நாளை (07) திறக்கப்படவுள்ளதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களின் எதிர்காலம் குறித்து நாங்கள் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் கடந்த காலங்களில் கிழக்கு ஆளுநரினால் அம்பாறை மாவட்டத்தில் தொற்று அதிகரித்ததை தொடர்ந்து பாடசாலைகள் மூட உத்தரவிடப்பட்டிருந்தது.

குறித்த பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நாங்கள் இன்று கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளருடன் இணைந்து தீர்மானித்துள்ளோம்.

இதன்போது கல்முனை சம்மாந்துறை கல்வி வலயத்தில் தரம் 10 11 12 13 மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கை ஆரம்பிக்க பரிந்துரையை வழங்கி உள்ளோம். இதன் இறுதி முடிவு கிழக்கு மாகாண ஆளுநரால் எடுக்கப்படும் என்று கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் இன்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: