திருக்கோவில் பிரசேத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல் படுத்தப்படுமா ?

 

அம்பாறை மாவட்டம்  திருக்கோவில் பிரதேசத்தில் இது வரையில் 04 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் இன்று திருக்கோவில் பிரதேச எல்லைக்குட்பட்ட சங்கமன் கிராமம் பிரதேசத்தில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதனையடுத்து எண்ணிக்கை 05 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இறுதியாக இனங்காணப்பட்டுள்ள நபருடன் தொடர்பினை பேணிய 60 பேருக்கு இன்று பீ.சீ.ஆர் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் குறிப்பிட்டார்.

மேலும் இதுவரையில் 100 மேற்பட்ட பீ.சீ.ஆர் பிரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டிருப்பதாகவும் குறித்த முடிவுகளின் அடிப்படையில் திருக்கோவில் பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல் படுத்தல் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும்.  தெரிவித்தார்

மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் திருக்கோவில் பிரதேச செயலகம் மற்றும் சபை மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

புயல்

மேலும் இன்றைய புயல் எச்சரிக்கையின் பொருட்டு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஆகியன தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த நிலமையினை கருத்தில் கொண்டு இன்று திருக்கோவில் பிரதேச செயலாளர் மற்றும் சபை தவிசாளர்கள் தங்களது அலுவலகத்தில் அலுவலக ஊழியர்களுடன் தயார் நிலையில் இருப்பதாகவும் அனர்த்தங்கள் நிகழ்ந்தால் உடன் அறிவிக்கும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

No comments: