சுயதனிமைப்படுத்தப்பட்ட ஒருவர் மரணம்

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


சுயதனிமையிலிருந்த 10 பேரில் ஒருவர் மரணமானதாக பொகவந்தலாவ பொது சுகாதார

அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ மோரா கீழ் பிரிவைச்சேர்ந்த 84 வயதுடையவரே இன்று  14/12/2020 காலை திடீரென மணமாகியுள்ளார்.

மரணமானவரின் பேரன் கொழும்பு  சீதுவ பகுதியிலிருந்த மோரா தோட்டத்திலுள்ள
வீட்டிற்கு வந்த நிலையில் பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகளினால்
குறித்த இளைஞனுடன்  குடும்பத்தினருமாக10 பேரை அவர்களது வீட்டிலே
சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு சுயதனிமைப்படுத்தி ஐந்து நாட்களிலே மேற்குறிப்பிட்டவர் திடீரென
மரணமாகியுள்ளார்.

மரணமானவருக்கு பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நுவரெலியா மாவட்ட
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும்  சடலம் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளதுடன்  பி.சி.ஆர் அறிக்கை கிடைக்கப்பெற்றவுடனே பிரேத
பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு  சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என
பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments: