வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கைகள்


வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இதன்படி, சுமார் 40 நாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தூதரகங்கள் மற்றும் கன்ஸியூலர் அலுவலகங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ளவர்களை அழைத்துவரும் நோக்கில், உரிய நாடுகளுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வெளிநாடு சென்றிருந்த இலங்கையர்களில் 52 ஆயிரம் பேர் இதுவரை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்கு  தென் ஐரோப்பியா,  ஜப்பான், கொரியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பத்து லட்சத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் பணிபுரிகின்றனர்.

இதேவேளை, தம்மை முறையாக பதிவு செய்துகொள்ளாத ஐந்து லட்சம் பேர் வரை வெளிநாடுகளில் பணிபுரிவதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: