நாட்டின் பொருளாதார வளர்ச்சி அனைத்து பிரிவுகளையும் பாதுகாக்கும் வகையில் இடம்பெற வேண்டும் ஜனாதிபதி


நாட்டின் பொருளாதார வளர்ச்சி சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதுகாக்கும் வகையில் இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று  தனியார்துறை தொழில் முயற்சியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதுகாக்கும் வகையில் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்கு தனியார் துறையின் பங்களிப்பு மற்றும் புதிய அணுகுமுறைகள் மிக முக்கியமாகும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்து விற்பனை செய்ய முடியும் ஆனால் அவ்வாறு செய்வதனால் வலுவான பொருளாதாரம் ஒன்றை உருவாக்க முடியாது என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் சீரான வளர்ச்சியைக் கொண்டு வருவதே தனது நோக்கம் என்று கூறிய ஜனாதிபதி  இந்த முயற்சிக்கு உதவும் நடவடிக்கைகளை கொண்டு வருமாறும், அதற்கான தடைகளை அடையாளம் காணுமாறும் தனியார் துறைக்கு முன்மொழிந்தார்

No comments: